மா, பலா, வாழை ஆகியவை தமிழ் இலக்கியத்தில் முக்கனிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த முக்கனிகளில் மிக முக்கியமானது மா என்றழைக்கப்படும் மாம்பழம் ஆகும். மாம்பழம் பழங்களின் ராஜா, முக்கனிகளின் ஒன்று, நமது நாட்டின் தேசியக் கனி என பல சிறப்புகளைக் கொண்டது. மேலும் மாம்பழமானது பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவற்றின் தேசியப் பழமாக உள்ளது. தித்திக்கும் மாம்பழத்தின் சுவைமிகுந்த ரகங்களான மாம்பழங்களின் ராணி கேசர், கிளிமூக்கு தோதாபுரி, பங்கனபள்ளி மாம்பழம், அல்போன்சா, மல்கோவா, நீலம் மாம்பழம் மற்றும் செந்தூரா மாம்பழம்பற்றி இத்தலத்தில் காண்போம்.
கேசர் மாம்பழம் என்பது 'கிர் கேசர்' மாம்பழம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரபலமான மாம்பழ வகை குஜராத்தில் உள்ள கிர்னார் மலையடிவாரத்தில் விளைவதால் கிர் கேசர் என்றும் அழைக்கப்படுகிறது. தனித்துவமான அதிக சுவை மற்றும் கவர்ந்திழுக்கும் நறுமணம் காரணமாக, கேசர் மாம்பழம் சமையல் பயன்பாடுகளில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இது 'மாம்பழங்களின் ராணி' என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாகவே மே மாதம் முதல் ஜூலை வரை அதிகமாக கிடைக்கிறது. கேசர் மாம்பலத்தில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், உணவு நார்ச்சத்து உள்ளது.
இந்தியாவில் விளையும் முக்கிய மாம்பழ வகைகளில் கிளிமூக்கு தோதாபுரி மாம்பழமும் ஒன்று. இந்த வகை மாம்பழம் தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் விளைகிறது. தோதாபுரி மாம்பழம் கிளியின் மூக்கை போன்ற அமைப்பு இருப்பதால் கிளிமூக்கு தோதாபுரி மாம்பழம் என்றழைக்கப்படுகிறது. அதிக சதைப்பற்றினால், பழுக்காத பச்சை நிறத்தில் மிளகாய்ப் பொடியுடன் உப்பு சேர்த்து வதக்கி உண்ணக்கூடிய ஒரே மாம்பழம் ஆகும். மாம்பழக் கூழ் தயாரிக்க மிகவும் ஏற்ற வணிக ரகமாக விளங்குகிறது. தென் மாநிலங்களில் விளையும் தோதாபுரி மாம்பழம் பல்வேறு பகுதிகளில் கல்லாமை, கலெக்டர், கலாமணி என்று அலைக்கப்படுகிறது.
பங்கனப்பள்ளி மாம்பழம் பெனேஷன், பனேஷன், பெனிஷான், சாப்பாட்டை, சபேதா, பங்கனபள்ளி, பங்கினபள்ளி பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த வகை மாம்பழம் ஆந்திரா பிரதேசத்தில் கர்னூல் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டது. பங்கனபள்ளி மாம்பழத்திற்கு ஆந்திர அரசு புவிசார் குறியீடு பெற்றுள்ளது. மிகுந்த நல்ல சுவை மற்றும் நறுமணம் கொண்டதாகவும், கெட்டியான சதைப்பற்றுடன்,பெரியதாகவும், மக்காச் சோள மஞ்சள் நிறத்தை உடைய இந்த வகை மாம்பழம் இந்தியா முழுவதும் கிடைக்கிறது. சாப்பிட சுவையாக இருக்கும் பங்கனப்பள்ளி மாம்பழம் ஆந்திராவிலிருந்து ஆண்டு தோறும் இவ்வகை மாம்பழங்கள் 5500 டன்கள் அளவுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அல்போன்சா மாம்பழம் மிகவும் பிரபலமான மாம்பழ வகைகளில் ஒன்று. இந்த வகை மாம்பழம் ழங்களின் ராஜா, காதர் குண்டு, பாதாமி, அப்பூஸ் மற்றும் சேலம் குண்டு மாம்பழம் என்று அழைக்கப்படுகிறது. நல்ல நறுமணத்துடன் இருக்கும் இந்த வகை மாம்பழம் மிகவும் இனிப்பாகவும், சதைப்பற்றுடன் சாறு நிறைந்ததாகவும் இருப்பதால் சர்பத், ஐஸ்கிரீம், லஸ்ஸி, மற்றும் கூழ் ஆகியவை தயாரிக்கவும், சமையலிலும் பயன் படுகிறது. மற்ற மாம்பழ வகைகளுடன் ஒப்பிடும் போது அல்போன்சா மாம்பழங்களில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அல்போன்சா பழம் ஏப்ரல் நடுப்பகுதியிலிருந்து ஜூன் இறுதி வரை கிடைக்கும்.
வியாபார ரீதியாக பயிரிடப்படும் இந்தியாவின் சிறந்த மாம்பழ வகைகளில் மல்கோவா மாம்பழமும் ஒன்று. இவை தமிழ்நாட்டிலும், தென்னிந்தியாவிலும் பயிரிடப்படும் மாம்பழ வகைகளில் ஒன்று ஆகும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் குஜராத்தில் மல்கோவா மாம்பழம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற இடங்கள் மல்கோவா மா சாகுபடியின் மையங்களாக உள்ளன. விட்டமின் சி, விட்டமின் பி 6 விட்டமின் ஏ, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற எண்ணற்ற சத்துகள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி உடலுக்கு நல்ல பலத்தை தரும் ஆற்றல் உள்ளது. இது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும் கிடைக்கும்.
செந்துரா மாம்பழம் நல்ல சுவையும் நறுமணமும், ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற சதைப்பற்றுடன் காணப்படும். இவை அதிக சுவையுடன் இருப்பதால் தேன் மாம்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. செந்துரா மாம்பழம், லால்பாக் அல்லது சிந்துரா அல்லது செந்தூரா என்றும் அழைக்கப்படுகிறது. அல்போன்சா மாம்பழத்திற்கு அடுத்தபடியாக செந்தூர மாம்பழம் அதிகமாக சமையலிலும், உணவிலும் சேர்க்கப்படுகிறது.
கேசர், தோதாபுரி, பங்கனபள்ளி, அல்போன்சா, மல்கோவா, நீலம், செந்தூரா போன்ற மாம்பழ ரகங்களை அறிந்துகொள்ளவும், மாம்பழ விவசாயத்தின் மகிழ்ச்சியையும் பெருமையையும் அனுபவிக்கவும் Getfarms-ல் மாந்தோப்பு வாங்கி இயற்கையுடன் இணைத்திடுங்கள்.
Stay connected with Getfarms! Follow us on social media for the latest updates, exclusive offers, and a glimpse into the world of farmhouse living. Join our community today