விநாயக சதுர்த்தி(Ganesh Chaturthi) இந்தியா மற்றும் இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். விநாயகர் அவதரித்த தினத்தைத்தான் நாம் விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi) தினமாகவும் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் வேறு வேறு வழிகளில் கொண்டாடுகிறோம். நாம் விநாயகரை ஐம்பத்தொரு விதமான சிலைகளாக வைத்து பூஜைகள் செய்து வழிபடுகிறோம். இந்த Getfarms Blog வலைப்பதிவில் நாம் விநாயகர் சதுர்த்தி பற்றிக் காண்போம்.
2024 ல் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7ஆம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவில், மக்கள் தங்கள் வீடுகளிலும், கோவில்களிலும் விநாயகர் சிலைகளை அலங்கரித்து பூஜைகள் மற்றும் பல விதமான படையல்கள் படைத்துக் கொண்டாடுகின்றனர்.
மேடை: சிலை வைப்பதற்காக சுத்தமான அலங்கரிக்கப்பட்ட மேடை.
சிவப்பு துணி: மேடையை மூடி, சிலையைச் சுற்றிக் கட்டும் தூய துணி.
விநாயகர் சிலை: பூஜைக்கான விநாயகர் சிலை மைய உருவம்.
வெற்றிலை : பிரசாதம் மற்றும் பூஜைக்காக பயன்படுத்தப்படுகிறது.
லட்டு பாரம்பரிய இனிப்புகள்: அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். இது விநாயகப் பெருமானுக்கு மிகவும் விருப்பமானதாகக் கருதப்படுகிறது.
அருகம்புல்: விநாயகப் பெருமானுக்கு உகந்த முக்கியமான பிரசாதம்.
தேங்காய் மற்றும் பழங்கள்: பூஜையின் போது தெய்வத்திற்குப் படைக்கும் பிரசாதம்.
தூபக் குச்சிகள் மற்றும் விளக்குகள்: புனிதமான சூழ்நிலையை உருவாக்க.
மாலை மற்றும் மலர்கள்: சிலை மற்றும் பூஜை பகுதியை அலங்கரிக்க.
கற்பூரம், மஞ்சள்: விநாயகரை வழிபட பயன்படுத்தப்படுகிறது.
•2024 விநாயகர் சதுர்த்தி தொடங்கும் நாள் : 7 செப்டம்பர் (சனிக்கிழமை)
•2024 விநாயகர் சதுர்த்தி பூஜை திதி ஆரம்பம் : 6 செப்டம்பர் (வெள்ளிக்கிழமை) மாலை 3:01 மணிக்கு
•2024 விநாயகர் சதுர்த்தி பூஜை முகூர்த்தம் : 7 செப்டம்பர் காலை 11 மணி முதல் மதியம் 1:34 வரை
•2024 விநாயகர் சதுர்த்தி பூஜை திதி முடிவு : 7 செப்டம்பர் மாலை 5.37 மணிக்கு
•2024 விநாயகர் சதுர்த்தி முடியும் நாள் : 17 செப்டம்பர் (செவ்வாய்க்கிழமை)
விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரை வணங்கும் முக்கிய இந்து திருவிழாவாகும். இத்திருவிழாவின் போது, மணல், களிமண், இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அழகிய விநாயகர் சிலைகளை வீட்டிற்குக் கொண்டு வந்து சில நாட்கள் பூஜை செய்து வழிபாடு செய்து நீர்நிலைகளில் கரைப்பார்கள். கலை நிகழ்ச்சிகள், பஜனைகள், பிரசாதம் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் பாரம்பரிய முறையில் பொது இடங்களில் நடத்தப்படுகின்றன.
1. ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், மும்பை , மகாராஷ்டிரா
2. விக்னேஷ்வரா கோவில், ஓசூர், மகாராஷ்டிரா
3. பல்லாலேஷ்வர் கோவில், பாலி, மகாராஷ்டிரா
4. காணிப்பாக்கம் விநாயகர் கோவில், சித்தூர், ஆந்திரப் பிரதேசம்
5. மோதி துங்ரி கணேஷ் கோவில், ஜெய்ப்பூர், ராஜஸ்தான்
6. அருள்மிகு மணக்குள விநாயகர் கோவில், புதுச்சேரி
7. திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
8. ஸ்ரீ மகா கணபதி கோவில், ரஞ்சன்கான், மகாராஷ்டிரா
9. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் , பிள்ளையார்பட்டி, தமிழ்நாடு
10. சிந்தாமணி கோவில், தேயூர், மகாராஷ்டிரா
Getfarms வலைதளத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் அதன் சிறப்பம்சங்களை விவரித்துள்ளோம். விநாயகர் சதுர்த்தி பூஜை செய்து நாம் எல்லோரும் அன்பும் பாசமும் கொண்டு ஒன்றிணைவோம். நாம் வாழ்வில் அமைதியையும் நிம்மதியையும் பெறவும் மற்றும் அனைவரும் செல்வச் செழிப்புடன் வாழவும் விநாயகப் பெருமானைப் பிரார்த்திக்கிறோம்.
Stay connected with Getfarms! Follow us on social media for the latest updates, exclusive offers, and a glimpse into the world of farmhouse living. Join our community today